LOADING

Type to search

சினிமா

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ படம் குறித்து முக்கிய தகவல்

Share

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 தொடர்பான தகவல்கள் அடிக்கடி வரும்நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.