ரஷியா கடலில் 4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கலப்பு
Share
ரஷியாவின் கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. இதில் சுமார் 9 ஆயிரம் டன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது. அனபா என்ற பகுதியில் சென்றபோது இந்த பகுதியை தாக்கிய புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின. இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியது. தற்போதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கடலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவு காரணமாக அப்பகுதியில் 2 டால்பின்களும் செத்து கரை ஒதுங்கின. கச்சா எண்ணெய் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் அதை தடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.