LOADING

Type to search

சினிமா

மின் மினி படத்தை இசையமைத்த முதல் படத்திலேயே கிடைத்த விருது – கதீஜா ரகுமான் நெகிழ்ச்சி

Share

பூவரசம் பீபீ , ஏலே போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி படம் மக்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக ஹலிதா `மின்மினி’ என்ற படத்தை இயக்கியனார். எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலமே கதீஜா அவரது திரைத்துறை இசை பயணத்தை தொடங்கியுள்ளார். படத்தை முரளி கிருஷ்ணன் உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை பலரும் பாராட்டிருந்தனர். இந்நிலையில் கதீஜா ரகுமானுக்கு இந்தியா மீடியா வொர்க்ஸ் அமைப்பு சார்பில் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இசைக்கான பயணத்தில் தான் இசையமைத்த முதல் படத்திலேயே முதல் விருதை பெற்றதில் மகிழ்ச்சி என கதீஜா பதிவு செய்துள்ளார்.