LOADING

Type to search

சினிமா

செஸ் சாம்பியன் குகேஷ் அழைப்பு – ரஜினிகாந்த் வாழ்த்து

Share

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார். இதற்கிடையில், நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் குகேஷை நேரில் அழைத்து கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் இச்சந்திப்பின்போது ரஜினிகாந்த் குகேஷிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அவர் வழங்கியுள்ளார்.