LOADING

Type to search

சினிமா

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பின்னணி பணிகளை நிறைவு செய்த அஜித் குமார்

Share

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்திற்கான பின்னணி பணிகளை முடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு…. என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் முதல்வரி இன்று வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் பின்னணி பணியை நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைகா புரொடக்சன்ஸ் தலைவர் சார்பாக தமிழ்குமரன் ஆகியோர் நடிகர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளனர்.