LOADING

Type to search

இந்திய அரசியல்

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Share

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. கைதான ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு என காவல் ஆணையர் கூறியுள்ளார். அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு, மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்று கூறுவது வெட்கக்கேடானது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காவல் ஆணையரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் கூறும் கருத்துகள் முரண்படுகின்றன. சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் எப்படி நடமாட முடியும்? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுடன் ஞானசேகரனுக்கு தொடர்பு என செய்திகள் வெளிவருகின்றன. விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.