LOADING

Type to search

சினிமா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘ரெட்ரோ’

Share

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45-ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில வாரங்களாக சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் நாகவம்சி நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் ‘760 சிசி’ என படத்தலைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகளவில் ரூ 107 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வசூலை ஈட்டியது. இப்படம் தற்போது OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.