பிரபு தேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிப்பு
Share
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா’ பாடல் ஆண்டிரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறந்த பிரபு தேவாவி உடலை 4 பெண்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்திற்கு சென்று சேர்க்கனும். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே ஜாலியோ ஜிம்கானா. இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.