LOADING

Type to search

இந்திய அரசியல்

வீராணம் ஏரியை பார்வையிட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள்

Share

தமிழக அரசு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களை தேடி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டிட கலையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் கோவில்கள், அகழ்வாராய்ச்சி மையங்கள், புகழ்பெற்ற நீர் நிலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் பெருமைகளை உலகுக்கு தெரிவிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பராந்தக சோழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கண்காணிப்பாளர் கனிமொழி தலைமையில் இலங்கை, கனடா, உகாண்டா, தென் அமெரிக்கா, மோரிஷீயஸ், ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர் குழுவினர் பார்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் கேட்டறிந்தனர். முன்னதாக இந்த குழுவினர் கீழடி, தஞ்சை பெரிய கோவில், ராமேசுவரம், தாராசுரம் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்ததாக கூறினார்கள்.