LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.