LOADING

Type to search

இந்திய அரசியல்

“விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… இதுவரை 13 பேர் கைது” – மத்திய அரசு தகவல்

Share

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டதொடர் என்பதால்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் பேசியதாவது, “2024ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு மத்திய அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார்.