டொனால்டு டிரம்பிற்கு ‘தங்க பேஜர்’ பரிசு – பெஞ்சமின் நெதன்யாகு
Share

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஹமாஸ் உடனான போர், பணய கைதிகள் விடுதலை உள்பட பல்வேறு விவகாரங்கள் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்த பயணத்தின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு தங்கத்தால் ஆன பேஜரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசாக அளித்துள்ளார். முன்னதாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து கடந்த ஆண்டு இஸ்ரேல் பேஜர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 42 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.