எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
Share

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.24ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், 24.2.2025 திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு, “பூத் கமிட்டி அமைப்பது; கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; கட்சி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது” முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.