LOADING

Type to search

உலக அரசியல்

ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் – டிரம்ப் குற்றச்சாட்டு

Share

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை. இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க ஜெலன்ஸ்கி நாடகம் ஆடி உள்ளார். உக்ரைன் அதிபர் தேர்தலை நடத்த விடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். உக்ரைனில் தேர்தல் நடத்தாவிடில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். 2019 தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரான நிலையில் கடந்தாண்டுடன் அவர் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.