LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை

Share

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 1ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி, பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்துள்ளதாகவும், அவர்கள்  இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.