LOADING

Type to search

உலக அரசியல்

எலான் மஸ்க்கின் 4-வயது மகனால் டொனால்டு டிரம்பிற்கு தர்மசங்கடம்

Share

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் தனது 4- வயது மகனுடன் அடிக்கடி அதிபரின் ஓவல் அலுவலகம் வருகை தருவதை பார்க்க முடிகிறது. அப்போது எலான் மஸ்க் மகன் செய்யும் சேட்டைகள் இணையத்தில் கவனம் பெறுகின்றன. இந்த நிலையில், அண்மையில் எலான் மஸ்க் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அப்போது தனது மகனையும் எலான் மஸ்க் அழைத்து சென்றுள்ளார். எலான் மஸ்கின் மகன் மூக்கை துடைத்துவிட்டு அப்படியே மேஜை மீது கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கவனித்த டிரம்ப், எங்கே தர்மசங்கடத்தில் நெளிந்துள்ளார். எனினும் சிரித்து சமாளித்த டிரம்ப், அதற்கு மறுநாளே தனது மேஜையை மாற்றியுள்ளார். டிரம்ப் மேஜையை மாற்றியதற்கு எலான் மஸ்க் மகன் செய்த செயலே காரணம் என நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.