LOADING

Type to search

உலக அரசியல்

சூடான் நாட்டு போரில் 200 பேர் படுகொலை

Share

கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை ராணுவப்படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்த நாட்டின் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாட்களாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.