ஜெயலலிதா உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி
Share

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி.விஜயபாஸ்கர், வேலுமணி, ஒ.எஸ். மணியன், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, வைகைச் செல்வன், சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.