LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் நடுவானில் பறவை மோதியதால் தீப்பிடித்த விமான என்ஜின்

Share

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து இண்டியானா மாகாணத்துக்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் சென்றபோது ஒரு பறவை மீது விமானம் மோதியது. இதில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் நெவார்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.