பிரபல அமெரிக்க பாடகி கார் விபத்தில் உயிரிழப்பு
Share

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன். 63 வயதான இவர் நோ மோர் ரெயின், மோர் தான் ய வுமன் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடி உள்ளார். இதற்காக சிறந்த பாடகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுக்கு இவரது பெயர் 3 முறை பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் அலபாமா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு இசைநிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மாண்ட்கோமரி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அவர் பயணித்த கார் மீது ஒரு லோரி மோதியது. இதில் அந்த கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஆங்கி ஸ்டோன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆங்கி ஸ்டோனின் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.