டிராகன் பட இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்
Share

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் அவரது புகழ் உச்சிக்கு சென்றுள்ளது. கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்விகேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது. டிராகன் பட இயக்குநரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், டிராகன் பட இயக்குநர் அஸ்வத்தை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து அஸ்வத் எக்ஸ் தள பதிவில், என்ன ஒரு அட்டகாசமான எழுத்து அஸ்வத். அருமை..! அருமை! அற்புதமா எழுதியிருக்கீங்கன்னு ரஜினி சார் என்னை பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் நம்மளை வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்..இதெல்லாம் இயக்குநர் ஆகணும்னு உழைக்கிற பல உதவி இயக்குநர்களோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களாக நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.