LOADING

Type to search

உலக அரசியல்

போரை நிறுத்த புதின் செய்யும் சூழ்ச்சி – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

Share

ரஷியா- உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்தும் விதமாக 30 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை ஏற்க உக்ரைன் ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதனினும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும் அதற்கு அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-போரை நிறுத்துவதற்கான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்த யோசனை சரியானது, நாங்கள் நிச்சயமாக அதை ஆதரிக்கிறோம்.

ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. போர் நிறுத்தம் நீண்ட கால அமைதிக்கு வழிவகுப்பதாகவும், பிரச்சினையின் வேரை கண்டறிந்து அதை அகற்றுவதாகவும் இருக்க வேண்டும். அதோடு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்றால் ஒரு சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும்.உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கான தனது லட்சியங்களை கைவிட வேண்டும். ரஷியாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படைகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும். உக்ரைன் துருப்புகளை அணி திரட்டுவது மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும்.

உக்ரைன் ராணுவத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட வேண்டும். ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் அகற்றப்பட வேண்டும். உக்ரைனில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அமெரிக்கா மற்றும் எங்கள் பிற கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இந்த விவகாரம் பற்றி பேச அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன்.இவ்வாறு புதின் கூறினார். இந்த சிலையில் போர் நிறுத்தத்துக்கு புதின் நிபந்தனைகளை விதித்ததற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ரஷிய அதிபர் புதின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நிராகரிப்பதற்கு பதிலாக நிபந்தனைகள் என்ற பெயரில் அதை இழுத்தடிக்கிறார். இந்த போரை தொடர விரும்புவதாகவும், உக்ரைனியர்களை கொல்ல விரும்புவதாகவும் அதிபர் டிரம்பிடம் நேரடியாக சொல்ல புதின் பயப்படுகிறார். எனவே தான் அவர் நிபந்தனைகள் மூலம் புதிய சூழ்ச்சி செய்கிறார்” என்றார்.