LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் 2 ஆம் கட்ட நிவாரணப் பணிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு

Share

மன்னார் நிருபர்

(3-03-2023)

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான 2 ஆம் கட்ட நிவாரண பணியை இன்றைய தினம்(3) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விசேட தேவைக்குரிய குடும்பங்கள், உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அடிப்படை சட்ட உதவி தேவையுடைய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்துடன் கூடிய நிவாரணம் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வழங்குவது என்ற அடிப்படையில் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டாவது கட்ட நிவாரண பணிகள் தெரி குடும்பங்களுக்கு மன்னாரில் உள்ள மெசிடோ நிறுவன காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.