LOADING

Type to search

சினிமா

தூய்மை பணியாளர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

Share

விஜய் மக்கள் இயக்கத்தினர் கோடை காலத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் சமீப காலமாக மக்கள் நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் அதன் வளர்ச்சியை குறித்து ஆலோசனை செய்யவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட விஜய் தற்போது அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கேழ்வரகு கூழ் கொடுத்துவருகின்றனர்.

முன்னதாக ரம்ஜான் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 300 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.