முகம் வீங்கிய நிலையில் கேஜிஎஃப் பட நடிகை மருத்துவமனையில்
Share
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். மாதவன் நடித்த ‘ஜே ஜே’ படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தொடர்ந்து பைரவா, கைதி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கே ஜி எஃப் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மாளவிகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார் மாளவிகா. அந்த பதிவில் கூறியிருப்பதாவது, உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.













