LOADING

Type to search

இலங்கை அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்-மன்னாரில் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுப்பு.

Share

(மன்னார் நிருபர்)

(20-04-2023)

 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட்ட உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை முன்னெடுத்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி குறித்த பெண்கள் அமைப்பினரால் கவன ஈர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது. மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது