LOADING

Type to search

சினிமா

‘மாநகரம்’ இந்தி மறுபதிப்பு – விஜய்சேதுபதியின் ‘மும்பைகர்’ முன்னோட்டம்

Share

லோகேஷின் மாநகரம் படம் இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் மும்பைகர் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேட்கர், சஞ்சய் மிஸ்ரா, ஹிரித்து ஹருண், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ளனர். சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். மும்பைக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.