LOADING

Type to search

சினிமா

ஜிகு ஜிகு ரயில் – ரஹ்மான் இசையில் உதயநிதியின் ‘மாமன்னன்’ பட பாடல்

Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமனிதன் படத்திலிருந்து ஜிகு ஜிகு ரயில் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதையடுத்து ‘மாமன்னன்’ படத்தின் அடுத்த பாடலான ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடல் ‘புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்’ என்ற வரிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல் வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.