LOADING

Type to search

சினிமா

ஒடிசா ரயில் விபத்து.. “கண்ணீர் கன்னம் தாண்டுகிறது..!” – கவிஞர் வைரமுத்து அஞ்சலி

Share

ஒடிசாவில் நேற்று சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் – சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை சுமார் 288 பேர் உயிரிழந்துப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளன. மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட மீட்புக்குழுவினர் ஒடிசா மாநிலம் விரைந்துள்ளனர். மேலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 127 சென்னை வரவிருந்ததாகவும் அவர்களில் இதுவரை 14 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில் அவர், ‘இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம். இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன். கண்ணீர் கன்னம் தாண்டுகிறது’ என பதிவிட்டுள்ளார்.