LOADING

Type to search

சினிமா

39 வயது இளம் நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்

Share

பிரபல நடிகர் இளம் வயதில் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நிதின் கோபி கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரது ஹலோ டேடி, நிசப்தா போன்ற படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. புணர் விவாஹா போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நிதின் கோபி நடித்துள்ளார். சில தமிழ் தொடர்களிலும் நடித்திருக்கும் அவர், கன்னடத்தில் சில தொடர்களையும் இயக்கியிருக்கிறார்.

தற்சமயம் புதிய சீரியலை இயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 39. புனித் ராஜ்குமார், லக்ஷ்மண், மந்தீப் ராய், புல்லட் பிரகாஷ் போன்ற கன்னட நட்சத்திரங்கள் வரிசையில் இளம் வயதில் நிதின் கோபியும் மராடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.