சிபிஐக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது
Share
தமிழ்நாட்டில் சிபிஐக்கு விசாரணை நடத்த அளித்த அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றது.
மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணை நடத்த வழங்கியிருந்த ªபொதுவான முன்அனுமதியை தமிழக அரசு இன்று (ஜூன் 14) மாலை திரும்பப் பெற்றது.
எனவே தமிழக அரசின் அனுமதியின்றி சிபிஐ இனி விசாரணை நடத்த இயலாது.
ஏற்கனவே மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானாஆகிய மாநிலங்கள் இதுபோன்று சிபிஐக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.













