செந்தில் பாலாஜியிடம் உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
Share
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 14) காலை 10.30 மணியளவில் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை வந்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்கு சென்று உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நலம் பற்றி , அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவனைக்கு சென்று கேட்டறிந்தனர்.













