LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Share

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டில்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கடந்த 1964-ம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் நிறுவப்பட்டது. தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன இந்தியாவின் மேம்பட்ட மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் பிரதமர் அருங்காட்சியகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மோடி அரசின் அற்புதமான பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.