LOADING

Type to search

சினிமா

மாமன்னன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் பா.இரஞ்சித்

Share

கண்ணை நம்பாதே’ படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‘மாமன்னன்’ படத்தின் முன்னோட்டத்தை பாராட்டி இயக்குனர் பா. இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உன் திரைமொழியின் வளமையும், கதையும், கதையின் மாந்தர்களும் உண்மையை கேட்ககூடியவர்களை சென்றடையட்டும்! சிறப்பான முன்னோட்டத்தை தந்த தம்பி மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.