LOADING

Type to search

சினிமா

கோவையில் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக் கச்சேரி

Share

கோயம்புத்தூரில் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடக்க உள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன், தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்த சூழலில் கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியில் ஆன்ட்ரியா இசைக்கச்சேரி நடைபெறுகிறது. வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசைக்கச்சேரி குறித்து ஆன்ட்ரியா கூறியதாவது, “கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.

இந்த கச்சேரி நன்றாக நடைபெற்றது. தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகிறது. கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் வகுப்புக்கு சென்றதல் தற்போது ஈசியா பாடுகிறேன். நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இதுபோன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை” என்று அவர் கூறினார்.