LOADING

Type to search

சினிமா

கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த ரெஜினா படக்குழு

Share

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. ‘ரெஜினா’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் தீனா பாக்ஸர் தீனாவாகவும், விவேக் பிரசன்னா எஸ்.ஐ.வினாயக்காக நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.