LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக கவர்னரை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம்: வைகோ முன்னிலையில் நல்லகண்ணு முதல் கையெழுத்து

Share

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று (ஜூன் 20) முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:-

தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார். முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்க்கட்சித் தலைவரா? கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்கக் கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.

ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.