LOADING

Type to search

இந்திய அரசியல்

தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டிய பாஜக எம்பி – மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் பெருமையாக கூறுகிறார்

Share

தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் எம்பியாக இருப்பவர், சோயம்பாபுராவ். பாஜகவைச் சேர்ந்த இவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டியுள்ளார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

“எனக்கு இந்தத் தொகுதியில் வீடு இல்லை. எனவே தொகுதி மேம்பாட்டு நிதியில் வீடு கட்டிக்கொண்டேன்” என்று கூறியுள்ள அவர், என் மகனின் திருமணத்திற்கு கூட தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொண்டேன். வேறு யாரும் என்னைப்போல் இந்த உண்மையை தைரியமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” என்றும் பேசியிருக்கிறார்.

பாஜக என்றாலே இப்படி சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை என்றாகி விட்டது