நடராஜன் மாதிரி நானும் நிறைய கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவேன் – நடிகர் யோகிபாபு உறுதி
Share
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.













