உல்லாசமாக இருந்து விட்டு ராணுவ வீரர் தாலி கட்ட மறுப்பு: கேரள கல்லூரி மாணவி தற்கொலை
Share
கேரள மாநிலம் கொல்லம் அருகே திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்த பிறகு ராணுவ வீரர் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதால் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள கோட்டாத்தலை பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ். அவரது ஒரே மகள் விருந்தா ராஜ்(வயது 24) அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அனுகிருஷ்ணன்(27) என்ற ராணுவ வீரருடன் விருந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. அதன்படி 2 பேரும் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து காதலர்கள் பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி வந்தனர்.விருந்தாராஜை திருமணம் செய்வதாக அனுகிருஷ்ணன் வாக்குறுதி அளித்து பலமுறை உல்லாசமாக இருந்தாராம். இதற்கிடையே கடந்த வாரம் அனு கிருஷ்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் விருந்தாராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காதலன் அனுகிருஷ்ணன் விருந்தாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அனுகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், அவரை அனு கிருஷ்ணன் தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விருந்தாராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வைத்து விஷ மருந்து சாப்பிட்டார்.
இதையடுத்து அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு சிகிச்சை பலனின்றி விருந்தாராஜ் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து கொட்டாரக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து ராணுவ வீரர் அனுகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.













