LOADING

Type to search

இந்திய அரசியல்

கனடா ‘ஆரபி’ புரடக்சன் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘ Finder ‘ திரைப்படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் சென்னையில் துரிதமாக நடைபெறுகின்றன.

Share

தயாரிப்பாளர் ரஜீவ் சுப்பிரமணியம் சென்னையில் தங்கியிருந்து இயக்குனர் மற்றும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றார்

கனடாவில் கலை மற்றும் இசை சார்ந்த முயற்சிகளுக்கு நல்லாதரவு வழங்கி வரும் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் ‘ஆரபி’ புரடக்சன் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘ ‘ Finder ‘ ‘ திரைப்படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் சென்னையில் துரிதமாக நடைபெறுகின்றன எமது சென்னைச் செய்தியாளர் அருண் அறிவித்துள்ளார்.இதே வேளை ‘ Finder ‘ தயாரிப்பாளர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்கள் கனடாவிலிருந்து சென்று சென்னையில் தங்கியிருந்து இயக்குனர் மற்றும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டி வருவதோடு விரைவில் ‘ Finder ‘ திரைப்படம் வெளியாகும் வகையில் விநியோகஸ்த்தர்களோடு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருக்கு உதவியாக ‘ Finder ‘ திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ராஜேந்திரனும் கடுமையாக உழைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க. ‘ Finder ‘ திரைப்படத்திற்கான ‘டப்பிங்’ பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் கவிப்பேரரசு எழுதியுள்ள 3 பாடகளுக்கான இசையமைப்புப் பணிகளும் சமாந்தரமாக இடம்பெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து செய்தியாளர் அருண்