A Generous Support of $ 409,000 from Scarborough Koneswaran Family and S&B Pallets Ltd to Scarborough Health Network
Share
ஸ்காபுறோ கோணேஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் S&B Pallets நிறுவனம் இணைந்து ஸ்காபுறோ வைத்தியசாலைகளின் குழுமத்திற்கு வழங்கிய 4 இலட்சத்து 9ஆயிரம் கனடிய டாலர்கள்
கனடாவில் புகழ்பெற்ற வர்த்தகக் துறை குடும்பத்தினராக விளங்கும் கோணேஸ்வரன் குடும்பத்தினர். அவர் தந்தை கோணேஸ்வரன் புதல்வர்தகள் விஜேய் கோணேஸ்வரன் ரஜீவ் கோணேஸ்வரன் . சஞ்சய் கோணேஸ்வரன் மற்றும் ரஞ்சித் கோணேஸ்வரன் மற்றும் அவர்களின் S&B Pallets Ltd நிறுவனம் இணைந்து ஸ்காபுறோ வைத்தியசாலைகளின் குழுமத்திற்கு 4 இலட்சத்து 9ஆயிரம் கனடிய டாலர்கள் வழங்கிய செய்தியான கனடியத் தமிழர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
கடந்த வாரம் இந்த நிதி அன்பளிப்பை வழங்க கோணேஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் ஸ்காபுறோ சென்றனரி வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.
அங்கு வைத்தியசாலை நிர்வாகிகளால் ஒரு விசேட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கோணேஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் S&B Pallets Ltd நிறுவனம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ் பேசும் ஒரு தனிக்குடும்பத்தினால் வழங்கப்பட்ட அதிகமான தொகை இதுவென்பதை வைத்தியசாலை நிர்வாகித்தனர் தெரிவித்தபோது அங்கு கூடியிருந்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கரகோசம் செய்து தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த நிதி அன்பளிப்பில் வைத்தியசாலைக்குத் தேவையான 3 முக்கிய உபரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
— செய்தி; சத்தியன் L J I Journalist