LOADING

Type to search

இந்திய அரசியல்

“தமிழக கவர்னரை ஜனாதிபதி நீக்க வேண்டும்” -காங்.மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தல்

Share

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கவர்னருக்கு அவர் வரம்புகள் எதுவும் தெரியவில்லை. இது போன்ற அரசியல் அமைப்பு விதிகளை மீறும் செயல்களை கவர்னர் செய்து இருக்கக் கூடாது. தனது பொறுப்புகள் என்னவென்றும் அரசியல் அமைப்பு பற்றியும் கவனருக்கு தெரியவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.