LOADING

Type to search

சினிமா

“உங்கள் செயலால் மகிழ்ச்சி அடைகிறேன்.” – ரசிகருக்கு கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்

Share

தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த ரசிகர் மன்ற நிர்வாகிக்கு நடிகர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். சமீபத்தில் மாநில அளவில் 10, +2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனது கையால் விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். இதுதவிர கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈசிஆர் சரவணனுக்கு தனது கையால் கடிதம் எழுதி பாராட்டியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக தாங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்ததாகவும், தங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து தான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஜய் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்