டாடா பட இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் ஜீவா
Share
டாடா பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ஜீவா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் கவின் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாடா. இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தனது முதல் படத்திலேயே வெற்றி கண்ட டாடா இயக்குநர் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமானார். அதில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தை கணேஷ் பாபு இயக்குவார் என்றும் படப்பிடியிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது கணேஷ் பாபு இயக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் ஜீவா நடிக்கப் போவதாகவும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.













