அடுத்து வரவிருக்கும் இந்தியன் 3 – பதிவேற்றம் கொடுத்த உதயநிதி
Share
1995 -ல் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெறும் வெற்றியை பெற்றது. தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேசன் போன்ற நட்சத்திர பட்டாலாமே முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்தது தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு முடிய 20 நாட்களே உள்ள நிலையில், ஏப்ரல் 2024 இந்தியன் 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாமன்னன் ப்ரோமோஷனின்போது இந்தியன் 2 குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “இந்தியன் – 2 திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. கமல் சாரும் ஷங்கர் சாரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இரண்டாம் பாகத்திற்காக அதிக காட்சிகளை ஷங்கர் சார் எடுத்துள்ளதால், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் தேவைப்பட்டால் உருவாக வாய்ப்புள்ளது” என்று கூறினார்













