LOADING

Type to search

இந்திய அரசியல்

நாள்தோறும் அவதூறு பரப்பி மக்களாட்சிக்கு இடையூறு; ஆளுநர் ரவி அமைதி காக்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்

Share

சனாதனம் பற்றி மீண்டும் கருத்து கூறியுள்ள ஆளுநர் ரவி’கு கண்டனம் தெரிவித்து, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

வரலாறு முழுவதும் பிறர் அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.

தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை!

நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.