LOADING

Type to search

இந்திய அரசியல்

திருவண்ணாமலை அம்மன் கருவறை முன்பு ரஜினி தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சை

Share

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி லில் உள்ள அம்மன் சன்னதி கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி லில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் வழிபாடு செய்த அவருக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோவி லில் உள்ள அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தப் புகைப்படம், அம்மன் கருவறை முன்பு எடுக்கப்பட்டுள்ளது. மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை. சுவாமி கருவறை முன்பு கோவி ல் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

இந்தநிலையில், அம்மன் கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்யும் புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தவர்கள் கூறும் போது, “கடவுள் முன்பு அனைவரும் சமம். யாராக இருந்தாலும், கருவறை முன்பு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கருவறை முன்பு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றனர்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது குறித்து எனது கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.