கேரளாவில் 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு
Share
கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 2 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இவ்வருடம் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டில் கடந்த 8ம் தேதி தான் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் ஓரளவு மழை பெய்த போதிலும், பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது. திருவனந்தபுரம், கொல்லம் உள்பட தென் மாவட்டங்களை விட திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, ஆகிய வட மாவட்டங்களில் தான் இதுவரை ஓரளவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 2ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மதிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முதல் 3 நாட்களுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யும். அடுத்து 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.













