LOADING

Type to search

சினிமா

திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் எ.வ.வேலுவுடன் திடீர் சந்திப்பு

Share

திருவண்ணாமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பேசினார். நடிகர் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் “லால்சலாம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பிற்கு இடையே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்தார் இந்நிலையில் நடிகர் ரஜினியை தி.மு.க. மூத்த அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார். அப்போது ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை அமைச்சர் எ.வ.வேலு பரிசளித்தார்.